வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 30 மார்ச் 2016 (16:02 IST)

பணம் இல்லாத மூதாட்டியை காலால் உதைத்து இறக்கி விட்ட பஸ் நடத்துனர் : அதிர்ச்சி வீடியோ

பணம் இல்லாத வயதான மூதாட்டியை பஸ் நடத்துனர் ஒருவர் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று, காலால் உதைத்து கீழே இறக்கி விட்ட சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.


 

 
மத்திய ரஷ்யாவில் உள்ள பேருந்தில் ஒரு வயதான மூதாட்டி ஒருவர் ஏறினார். ஒரு குறிப்பட்ட இடத்தை கூறி டிக்கெட் கேட்டுள்ளார். ஆனால் அவரிடம் போதிய பணம் இல்லை என்று தெரிகிறது. அதனால், பேருந்து நடத்துனர் அவரிடம் கடுமையான வாக்குவாத்தில் ஈடுபட்டார்.
 
மேலும், பணம் இல்லாமல் பேருந்தில் பயணிக்க முடியாது என்று கூறி அந்த முதாட்டியை கீழே இறங்க சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த மூதாட்டி இறங்க மறுத்துள்ளார். அதனால், கோபமடைந்த அந்த நடத்துனர், அந்த மூதாட்டியை தரதரவெனெ வலுக்கட்டாயமாக இழுத்து கீழே இறக்கியுள்ளார். மேலும் அவரை தனது காலால் எட்டி உதைத்துள்ளார்.
 
இதை அந்த பேருந்தில் உள்ளவர்கள் வேடிக்கைப் பார்த்தார்களே தவிர, யாரும் அந்த மூதாட்டிக்கு உதவ முன்வரவில்லை. அந்த சம்பவத்தை யாரோ ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த நடத்துனரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.