1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya
Last Updated : வெள்ளி, 29 ஜூலை 2016 (11:44 IST)

80 ஆண்டுகளுக்கு பின் தலைகாட்டிய விபச்சார கப்பல்: பொற்காசு குவியலால் பரபரப்பு

80 ஆண்டுகளுக்கு பின் தலைகாட்டிய விபச்சார கப்பல்: பொற்காசு குவியலால் பரபரப்பு

எஸ்எஸ் மான்டி கார்லோ என்னும் கப்பல் 80 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கியது. தற்போது கலிபோர்னியாவில் சிதிலமடைந்த நிலையில் தண்ணீருக்கு வெளியே தலைகாட்டியிருக்கிறது.


 


1921ம் ஆண்டு எஸ்எஸ் மான்டி கார்லோ என்ற பெயரில் கச்சா எண்ணெய் எடுத்துச் செல்வதற்கான ஆயில் டேங்கர் கப்பலாக அறிமுகம் செய்யப்பட்ட கப்பல், நாளடைவில் மது அருந்தும் பார், நடன அரங்கம், சூதாட்ட விடுதி, விபச்சார விடுதி என சேவைகளை வழங்கும் விசேஷ கப்பலாக மாற்றப்பட்டது.

கடந்த 1937ம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று ஏராளமானோர் இந்த கப்பலில் கூடியிருந்தனர். புத்தாண்டு பார்ட்டியும் அமர்க்களமாக நடந்தது. அன்று ஏற்பட்ட பெரும் சூறாவளியில் இந்த கப்பல் சிக்கியது. சூறாவளியின் சீற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் கப்பல் கலிஃபோர்னியா கடற்கரையோரம் தரைதட்டியது.

சட்டவிரோத செயல்கள் நடைபெற்ற கப்பல் என்பதால், இந்த கப்பலை உரிமை கோர அதன் நிர்வாகிகள் முன்வரவில்லை. இதனால், அந்த கப்பல் மணலில் புதைந்தது.

எல் நினோ பருவ நிலை மாற்றத்தால் ஏற்பட்ட காற்றின் வேகமும், கடல் அலையின் சீற்றமும் இந்த கப்பலை பல அடிகள் மூடியிருந்த மணலை நீக்கி, எல் கேமினோ டவர் அமைந்திருக்கும் கொரனாடோ கடற்கரை பகுதியில் தற்போது இந்த கப்பல் கிடக்கிறது.

இந்த கப்பலில் சூதாட்டத்திற்கும், விபச்சாரத்திற்குமாக எக்கச்சக்கமாக பணமும், நாணயங்களும் புழங்கியிருக்கினறன. இதனால், இந்த கப்பலில் பொற்காசுகள் மற்றும் வெள்ளிக் காசு குவியல் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அதன் மதிப்பு $100,000 ஆக கணக்கிடப்பட்டு உள்ளது.

இந்த கப்பலின் கதையை மையமாக வைத்து கேம்ளிங் ஷிப் என்ற பெயரில் ஹாலிவுட் படம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்