வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 9 ஜூலை 2015 (18:04 IST)

’அமெரிக்க நாணயத்தை எதிர்த்து செயல்பட வேண்டும்’ - பிரிக்ஸ் மாநாட்டைல் புதின்

அமெரிக்க நாணயமான டாலரை சார்ந்து செயல்படுவதை எதிர்த்தும் இணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
 
பிரேசில், ரஷ்யா இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ’பிரிக்ஸ்’ என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு ரஷ்யாவில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் மோடி சென்றுள்ளார்.
 
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேடிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ‘பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் உலக அளவிலான பொருளாதார ஆதிக்கத்தை எதிர்த்தும், அமெரிக்க நாணயமான டாலரை சார்ந்து செயல்படுவதை எதிர்த்தும் இணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது’ என்று அவர் கூறினார்.
 
மேலும், பிரிக்ஸ் அமைப்பை ராணுவக் கூட்டணியாகவோ, அரசியல் கூட்டணியாகவோ உருவாக்கும் எண்ணம் இல்லை என்று புடின் கூறியுள்ளார்.