வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: திங்கள், 27 அக்டோபர் 2014 (12:11 IST)

பிரேசில் நாட்டின் அதிபராக மீண்டும் தேர்வானார் டில்மா ரூசெப்: நரேந்திர மோடி வாழ்த்து

பிரேசில் நாட்டின் அதிபராக இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டில்மா ரூசெப்க்கு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
உலகின் 5வது பெரிய நாடாக விளங்கும் பிரேசிலில், மொத்தம் பதிவான 98 சதவீத வாக்குகளில் டில்மா ரூசெப் 51.5 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக பிரேசில் நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
 
இந்த வெற்றி குறித்து டில்மா ரூசெப் கூறுகையில், ‘தற்போது நான் சிறந்த அதிபராக செயல்படவேண்டியதாக உள்ளது‘ என்றார்.
 
இந்நிலையில், பிரேசில் நாட்டின் அதிபராக டில்மா ரூசெப் இரண்டாவது முறையாக தேர்தெடுக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘பிரேசில் நாட்டின் 36 ஆவது அதிபராக டில்மா ரூசெப் 51 சதவித வாக்குகள் பெற்று, மீண்டும் 2 ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
அவரது இந்த வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். இனி வரும் ஆண்டுகளில் இந்திய பிரேசில் உறவு  மேலும் வலுப்படும் என நான் எதிர்ப்பார்க்கிறேன்‘ இவ்வாறு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.