வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 6 டிசம்பர் 2019 (10:25 IST)

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் உடல்நலக்குறைவால் மறைவு..

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாப் வில்லீஸ் உடல்நலக்கோளாறு காரணாமாக காலமானார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான பாப் வில்லீஸ் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளரும் ஆவார். அவர் ஆடிய 90 டெஸ்ட் போட்டிகளில் 325 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் என்பது அவரது தனி சிறப்பு.

மேலும் 1981 ஆம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தியது அவரது முக்கியமான சாதனைகளில் ஒன்றாகும்.

பாப் வில்லீஸ் கடந்த சில ஆண்டுகளாகவே கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே கடந்த 2 மாதங்களாக உடல்நலம் குன்றிய நிலையில் இருந்த அவர், கடந்த புதன்கிழமை காலமானார். பாப் வில்லீஸ் மறைவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் சங்கம் உட்பட ஐசிசி மற்றும் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.