1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (12:19 IST)

இலவச வைஃபை வசதியுடன் கழிப்பறை

சீனாவின் பீஜிங் நகராட்சி கழிப்பறை புரட்சி திட்டத்தின் கீழ், இலவச வைஃபை வசதியுடன் 100 கழிப்பறைகளை இந்த ஆண்டில் கட்ட திட்டமிட்டுள்ளது.


 
 
இந்த புரட்சி கழிப்பறைகளை டங்ழோ மற்றும் ஃபங்ஷன் மாவட்டங்களில் கட்ட திட்டமிட்டுள்ள நகராட்சி நிர்வாகம், ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் செல்ஃபோன் சார்ஜ் செய்யும் வசதி மற்றும் மின்சார வாகனங்கள் போன்றவற்றையும் அமைக்க இருப்பதாக பீஜிங் நகராட்சி அமைப்பின் நிர்வாகி ஜி யங் தெரிவித்தார்.
 
அடுத்ததாக கழிப்பறையில் பேபி சீட் எனப்படும் குழந்தைகளை அமரவைக்கும் வசதி கொண்ட கழிப்பறை இருக்கை கொண்டு வரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தாய்மார்களுக்கு குழந்தைகளை கழிப்பறையில் அமரவைக்கும் சுமை குறையும் என தெரிவிக்கிறது பீஜிங் நகராட்சி.
 
கழிப்பறை புரட்சி மூலம் உருவாக்கப்படும் இந்த நவீன வசதிகொண்ட ஒரு கழிப்பறைக்கு 50000 யுவான் முதல் 100000 யுவான் செலவாகும் என வரையறுத்துள்ளனர். இந்திய ரூபாயின் மதிப்பில் 5,13,389 முதல் 10,26,779 வரை ஆகும் என கூறப்படுகிறது.