வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 23 ஏப்ரல் 2015 (15:51 IST)

இந்தியரின் தலை துண்டித்து மரண தண்டனை விதித்த சவுதி அரேபியா

முதலாளியை கொலை செய்ததற்கு தண்டனையாக சவுதி அரேபியாவில் இந்தியர் ஒருவருக்கு தலை துண்டித்து மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
 
சவுதி அரேபியாவில் கற்பழிப்பு, சமய எதிர்ப்பு, போதைப் பொருள் கடத்தல், கொலை உள்ளிட்ட குற்றங்களை புரிவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்படுகிறது.
 
இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த சஜாதா அன்சாரி என்பவர் சவுதி அரேபியாவில் ஆடு மேய்க்கும் பணியினை செய்து வந்து உள்ளார். அன்சாரி, அவரது முதலாளியை அடித்து கொலை செய்துவிட்டு, கொள்ளை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
 
இந்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அன்சாரியின் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருவருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றி உள்ளது.
 
சவுதி அரேபியாவில் இந்த ஆண்டு மட்டும் 60 பேருக்கு தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 87 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாடுகள் பட்டியலில் சவுதி அரேபியா முதல் 5 இடங்களை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.