வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (19:59 IST)

மண்டையோடு இல்லாத அதிசய குழந்தை

அமெரிக்காவில் உள்ள பிராண்டன் மற்றும் பிரிட்டானி தம்பதியருக்குப் ஒரு வருடத்திற்கு முன்னாள் பிறந்த குழந்தை மண்டை ஓடு இல்லாமல் இருப்பது மருத்துவ உலகத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழந்தைக்கு ஜெக்சன் ஸ்ட்ராங் என்று பெயர் வைத்துள்ளனர்.


 

 
Anencephaly எனும் இந்நோயுடன் பிறந்த இந்த குழந்தைக்கு முதலாவது பிறந்தநாளை பிராண்டன், பிரிட்டானி தம்பதியனர் அண்மையில் கொண்டாடியுள்ளனர்.
 
இந்த குழந்தையின் தாய் பிரிட்டானி கருவுற்றிருந்தபோது, பரிசோதனை செய்துள்ளார். அப்பொழுது Anencephaly என்ற மண்டையோட்டு குறைபாட்டு நோயுடன் குழந்தை இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனால் மண்டையோடும் பெருமூளை வளர்ச்சியும் இல்லாத குழந்தை என்பதால் 23 வாரங்களில் கருக்கலைப்பு செய்யுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இறுதியில் குழந்தையைப் பெற்றுவிடத் தீர்மானித்தார்கள். இருதியில் குழந்தை நலமாகப் பிறந்தது. ஆனால் பாதி மண்டை மட்டும்தான் இல்லை.


 

 
ஜெக்சனின் எதிர்காலம் குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கும் போது, அவன் பசியாக இருப்பதாகச் சொல்ல மாட்டான். சாதாரண வாழ்விற்குத் தேவையான எதையும் அவன் செய்ய மாட்டான் என்றுள்ளனர்.
 
பின்னர், குழந்தை பிறந்து 1 வருடம் கடந்துள்ள நிலையில், எங்கள் மகனின் இவ்வாறான நிலை ஆரம்பத்தில் எமக்குக் கடினமாக இருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை, எந்நேரத்திலும் நாங்கள் அவனை இழக்க நேரிடும் என நினைத்தோம். ஆனால், நாங்கள் நினைத்ததற்கு மாறாக அவன் தற்போது மிக திடமாகவும், சுறுசுறுப்பாகவும் உள்ளான் என்று ஜெக்சனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.