டிவி பார்த்து இந்த குழந்தை என்ன செய்கிறது என்று பாருங்கள் : ஜாலி வீடியோ


Murugan| Last Modified வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (19:09 IST)
குழந்தைகள் என்ன செய்தாலும் அது அழகுதான். பேசுவது, தத்தி தத்தி நடப்பது, காட்டும் முக பாவங்கள் என அனைத்துமே அழகுதான். அதிலும், குழந்தைகள் நடனம் ஆடினால் இன்னமும் அழகு..

 

 
சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறடு. அதில், ஒரு குழந்தை தொலைக்காட்சி பார்க்கிறது. அதில் ஒரு திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அது ஹாலிவுட் அதிரடி கதாநாயகன் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் நடித்த  ‘ராக்கி’ படமாகும். 
 
அந்த படத்தில் அவர் உடற்பயிற்சி செய்வது, குத்துச் சண்டைக்கு பயிற்சி செய்வது என ஏராளமான காட்சிகள் வருகிறது.
 
அந்த குழந்தை அதை ஒவ்வொன்றாக பார்த்து, அவர் எப்படி செய்கிறாரோ, அதை தானும் செய்ய முயற்சிக்கிறது. அடுத்து இதுதான் வரும் என்று தெரிந்தது போல், அந்த குழந்தை செய்யும் செயல்கள், பார்ப்பவை ஆச்சர்யப்படுத்துகிறது.
 
அதை நீங்களும் பாருங்கள்..
 


இதில் மேலும் படிக்கவும் :