வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 19 அக்டோபர் 2015 (17:01 IST)

ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.1400 கோடி அபராதம்; இந்தியர்களின் தொழில்நுட்பம் திருட்டு

இந்திய மாணவர்களின் தொழில்நுட்பத்தை திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கி ஆப்பிள் நிறுவனம் 1400 கோடி ரூபாயை இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
இந்திய வம்சாவளியை சேர்ந்த குரிந்தர் சோஹி மற்றும் தெரானி விஜயகுமார். இவர்கள் இருவரும் ராஜஸ்தானிலுள்ள பிட்ஸ் பிலானி பல்கலைக்கழகத்தில் மின்னணு தொழில்நுட்பத்தில் பி.டெக்., பட்டம் பெற்றவர்கள்.
 
இவர்களை உள்ளடக்கிய குழு அமெரிக்காவிலுள்ள விஸ்கான்சின் பல்கலையின் கீழ்செயல்படும் முன்னாள் மாணவர்களின் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு [Wisconsin Alumni Research Foundation] (WARF) கணிசமான செயல்திறன் கொண்ட அத்வேக நவீன தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கி இருந்துள்ளனர். இதற்கான காப்புரிமையையும் இவர்கள் பெற்றிருந்தனர்.
 
அனால், ஆப்பிள் நிறுவனம் இந்த நவீன தொழில்நுட்பத்தை அனுமதி பெறாமல் பயன்படுத்தி வருவதாக, அமெரிக்காவின் மேடிசன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த ஆராய்ச்சி அமைப்புக்கு, ரூ.1,400 கோடி ரூபாயை ஆப்பிள் நிறுவனம் இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.