வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (19:46 IST)

மூன்று நாட்களில் ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை விற்று ஆப்பிள் நிறுவனம் சாதனை

ஆப்பிள் நிறுவனம், மூன்று நாட்களில் ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை விற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.


 

 
ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் வரிசையில் சிக்ஸ் எஸ், சிக்ஸ் எஸ் பிளஸ் ஆகிய புதிய மாடல்களை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது.  இந்த மாடல்களை ஆப்பிள் போன் பயன்படுத்துபவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர். இதனால் இது விற்பனையில் சக்கைப் போடு போட்டது.
 
தற்போது சீனா உட்பட 9 நாடுகளில் மட்டுமே இந்த புதிய போன்கள் வெளியிடப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 9-ந்தேதி இத்தாலி, மெக்ஸிகோ, ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் தைவான் நாடுகளிலும் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகிறது. 
 
இந்தியாவில் அக்டோபர் 16-ந்தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் உலகின் 130 நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன்களை வெளியிட ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. 
 
இந்நிலையில், ஆப்பிள் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில் மூன்றே நாட்களில் ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை விற்று சிக்ஸ் எஸ், சிக்ஸ் எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன்கள் புதிய சாதனை படைத்துள்ளது.