செவ்வாய், 18 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 29 ஆகஸ்ட் 2025 (08:08 IST)

6 மணிக்கு மேல் ஆட்டோ கிடையாது.. 2 மணி நேரம் தான் செல்போன் பயன்படுத்த வேண்டும்: டோக்கியோ மேயர் உத்தரவு

6 மணிக்கு மேல் ஆட்டோ கிடையாது.. 2 மணி நேரம் தான் செல்போன் பயன்படுத்த வேண்டும்: டோக்கியோ மேயர் உத்தரவு
டோக்கியோ மேயர் 6 மணிக்கு மேல் ஆட்டோ ஓட்டுவதற்கு தடை விதித்ததோடு, மக்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே ஸ்மார்ட்போன் பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் அதிகரிப்பு பாலியல் குற்றங்கள் மற்றும் கடத்தல்களுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டியதால், இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு ஜப்பான் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
 
டோக்கியோவில் பொதுமக்கள் போக்குவரத்துக்கு முக்கிய பங்காற்றும் ஆட்டோ ரிக்‌ஷாக்கள், இரவு 6 மணிக்கு மேல் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
டோக்கியோ மேயரின் இந்த உத்தரவுகள் ஜப்பான் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பான விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva