வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Bharathi
Last Updated : சனி, 26 செப்டம்பர் 2015 (07:29 IST)

அமெரிக்கா கொண்டு வந்த வரைவு தீர்மானம் மீதான கலந்தாய்வு ரத்து!

இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து அமெரிக்கா கொண்டு வந்த வரைவு தீர்மானம் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.


 
 
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது அரங்கேங்கிய மனித உரிமை மீறல்கள் குறித்து,  ஐ.நா. மனித உரிமைகள் குழு விசாரணை நடத்தி, சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
 
இதையடுத்து, இலங்கை போரின்போது நடைபெற்ற குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய விசாரணை அமைப்பை இலங்கை அரசே உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய வரைவு தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டு வந்தது.
 
இந்த தீர்மானத்திற்கு இலங்கையின் ஆதரவு நாடுகளான பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, அந்த வரைவு தீர்மானத்தில் அமெரிக்கா சில திருத்தங்களை செய்துள்ளது.
 
அதன்படி, சர்வதேச நீதிபதிகள் அடங்கிய விசாரணை அமைப்பு என்பதற்கு பதிலாக காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் அடங்கிய விசாரணை அமைப்பு என்பது போன்ற பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து காமன்வெல்த் நீதிபதிகள் அடங்கிய அமைப்பு விசாரணை செய்யும். இந்த தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
 
இதனையடுத்து, நேற்று நடைபெறுவதாக இருந்த இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்க வரைவு தீர்மானம் தொடர்பான கலந்தாய்வு  ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
கலந்தாய்வு ரத்தானதால், வரும் 30ஆம் தேதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் பொது விவாதம் நடைபெறவுள்ளது.