1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. ameica shoots down irans trons in hormuz

ஈரானின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!.. ஹோர்மஸ் நீரிணையில் பதட்டம்!...

drone
அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி ஈரான் நாட்டை தாக்க துவங்கியது. அதில் ஈரானின் உச்சத் தலைவர் கமெனி கொல்லப்பட்டார். இதனால் கோபமடைந்த ஈரான் அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளின் மீது தாக்குதலை நடத்தியது.
 
அதோடு வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடிவிட்டது.  இதையடுத்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் எரிபொருள் தட்டப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாகவே வணிக சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது..
 
ஒருபக்கம் தற்போது அமெரிக்கா ஈரான் நாடுகளுக்கிடையே போர் நடைபெறவில்லை. பேச்சுவார்த்தையின் காரணமாக தற்காலிகமாக  போர் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் அவ்வப்போது தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான், ஹோர்முஸ் நீரிணை மீது ஈரான் அனுப்பிய நான்கு ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியிருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. மேலும், ஈரானிய  கடலோர கண்காணிப்பு ரேடார் தளங்களுளையும் தாக்கியதாக அமெரிக்கா கூறியிருக்கிறது.
 
அடுத்த கட்டுரையில்
பிளம்பர் வேலை!. மாசத்துக்கு 2 லட்சம் வருமானம்!. டெல்லியை கலக்கும் இளைஞர்!..