வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (04:36 IST)

லண்டனில் அம்பேத்கர் வீட்டை வாங்கியது இந்தியா

லண்டனில் சட்ட மேதை அம்பேத்கர் தங்கியிருந்த வீட்டை இந்திய அரசு ரூ 31 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.
 
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வகுத்தவர் அண்ணல் அம்பேத்கர். அவர், கடந்த 1921- 1922-ஆம் ஆண்டு லண்டனில் கல்வி கற்ற போது, அங்கு, அவர் ஒரு வீட்டில் தங்கியிருந்தார். அந்த வீடு, இரண்டாயிரத்து ஐம்பது சதுர அடி, 3 மாடிகளை கொண்டது.
 

 
அந்த வீட்டை வாங்க மகாராஷ்டிரா அரசு வாங்க முயற்சி மேற்கொண்டது. இந்த நிலையில், அந்த வீட்டின் உரிமையாளருக்கும், மகாராஷ்டிர மாநில அரசுக்கும் இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தானது.
 
இந்திய மதிப்பின்படி, ரூ.31 கோடி மதிப்புள்ள அந்த வீட்டை, முன்பணமாகரூ 3 கோடி கொடுத்து மகாராஷ்டிர அரசு வாங்கியது. மீதிப்பணம் அடுத்த நாட்களில் செலுத்த உள்ளது.
 
இந்த நிலையில், சமூக நீதிக்கான இந்தியப் போராளி டாக்டர் அம்பேத்கர் இங்கு வாழ்ந்தார் என்ற கல்வெட்டு ஏற்கெனவே இங்கு இடம் பெற்றுள்ளது. மேலும், இந்த வீடு சர்வதேச நினைவுச் சின்னமாக மாற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.