தற்போது பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதையே விரும்புகின்றனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுவதை தவிர்க்க, அமெரிக்காவை சேர்ந்த சூப்பர்ஹியூமன் என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒரு சுவாரசியமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கட்டாயப்படுத்தி ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவழைப்பதற்கு பதிலாக, அவர்கள் விரும்பி வரும் வகையில் உதவித்தொகை மற்றும் பயண சலுகைகளை இந்நிறுவனம் வழங்குகிறது. வாரத்தில் ஐந்து நாட்களும் அலுவலகம் வந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு காலாண்டுக்கு சுமார் 1.8 லட்சம்...