1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 20 அக்டோபர் 2014 (20:18 IST)

தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் - ஏராளமானோர் பலி

ஈரானில் மனித வெடிகுண்டு வெடித்ததில் 21 பேர் பலியானார்கள், மசூதி சேதமடைந்தது. இத்தகைய தாக்குதல்களால் கடந்த 10 நாட்களில் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
 
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை பிடித்து வைத்து அதை இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு எதிராக ஈராக் ராணுவத்துடன் இணைந்து அமெரிக்கா கூட்டணி படைகள் தாக்குதல் வேட்டை நடத்துகின்றனர்.
மேலும் ஷியா பிரிவினர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அவர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் தீவிரவாதிகள் கருதுவதால், ஷியா பிரிவினர் அதிகமாக வாழும் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இத்தகைய தாக்குதல்களால் கடந்த 10 நாட்களில் மட்டும் 150 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லபட்டுள்ளனர்.
 
ஈராக்கின் மேற்கு பாக்தாத்தில் உள்ள ஷியா மசூதியில் நடந்த  குண்டுவெடிப்பில் 21 பேர் பலியானார்கள் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.  மேற்கு பாக்தாத்தில் உள்ள மசூதியில் மர்ம மனிதன், தான் அணிந்து இருந்த வெடிகுண்டு வெடிக்க செய்ததில் மசூதி கடும் சேதமடைந்தது.
 
இந்த சம்பவத்திற்கு 2 நாட்களுக்கு முன்புதான் ஷியா பிரிவினர் வாழும் பகுதியில் நடைபெற்ற 3 கார்வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இதற்கு முன்பு நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். 65 பேர் படுகாயம் அடைந்தனர்.
 
தொடர்ந்து குண்டுவெடிப்புகள் மற்றும் எதிர் தாக்குதல்களால் அப்பகுதிகள் போர்களம்போல் காட்சியளிக்கின்றன.