வெள்ளி, 28 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 23 ஜூலை 2016 (15:00 IST)

20 ஆண்டுகளாக பக்கெட்டுக்குள் வாழ்ந்து வரும் இளம்பெண் (வீடியோ இணைப்பு)

நைஜீரியா நாட்டில் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட ரஹிமா அருமா என்ற பெண் கடந்த 20 வருடங்களாக பக்கெட்டில் வாழ்ந்து வருகிறார். அவரது மர்ம நோய் காரணமாக அவரது உடல் உறுப்புக்கள் வளர்ச்சி பாதிப்படைந்துள்ளது.


 
 
அருமா 6 மாத குழந்தையாக இருந்த போது அவரது கைகள் மற்றும் கால்களின் வளர்ச்சி நின்றுவிட்டது. குறைந்த பட்ச நகர்வுகளுடனையே வாழ்ந்து வருகிறார் ரஹிமா. ரஹிமாவின் நோயை குணப்படுத்த மருத்துவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.


 
 
அவள் ஜின் - ஆல் சபிக்கப்பட்டதால் இப்படி இருக்கிறார் என சில இஸ்லாமிய மூடநம்பிக்கையாளர்கள் கூறுகின்றனர். ரஹிமாவின் குடும்பம் அவளது நோயை குணப்படுத்த பல ஆயிரம் டாலர்களை சிகிச்சைக்காக செலவளித்துள்ளனர்.
 
ரஹிமாவுக்கு சொந்தமாக மளிகை கடை ஒன்றை நடத்த வேண்டும் என்பது லட்சியம். ஒரு நாள் அவளது கனவு நிறைவேறும், அவள் சொந்தமாக மளிகை கடையை நடத்துவாள் என ரஹிமாவின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.


நன்றி: b Tv
 
ரஹிமாவின் புகைப்படமும் அவரது வினோத நோய் பற்றிய தகவலும் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருவதால் பலரும் அவருக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.