செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025 (10:37 IST)

இந்தியாவிடம் பாய்ச்சல்.. சீனாவிடம் பதுங்கல்! வரிவிதிப்பை சீனாவுக்கு மட்டும் 90 நாட்கள் நீட்டித்த அமெரிக்கா!

Trump Xi jingping

உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீனாவிற்கு வரிவிதிப்பிற்கான தற்காலிக தடையை மேலும் நீட்டித்துள்ளது அமெரிக்கா.

 

ஆரம்பத்தில் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரியை கண்டித்த சீனா, அமெரிக்கா பொருட்களுக்கு தனது நாட்டில் வரியை உயர்த்தியது. இதனால் கோபமடைந்த அமெரிக்கா சீனாவுக்கான வரியை மேலும் உயர்த்தியது. இப்படியே இரு நாடுகளும் குடுமிப்பிடி சண்டையாக வரியை உயர்த்திக் கொண்டே செல்ல, உச்சப்பட்சமாக சீன பொருட்களுக்கு அமெரிக்காவில் 145 சதவீத வரியை விதித்தார் ட்ரம்ப்.

 

பின்னர் இரு நாடுகளிடையே சமரச பேச்சுவார்த்தை முடுக்கிவிடப்பட்ட நிலையில் புதிய வரிவிதிப்பை இரு நாடுகளும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதுடன், வரி விதிப்பு குறித்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் வரிவிதிப்பு நிறுத்தக் காலம் முடிவடைய உள்ள நிலையில் தானாக முன்வந்து மேலும் 90 நாட்கள் வரிவிதிப்பு தடையை நீடித்துள்ளது அமெரிக்கா.

 

ஆனால் இந்தியாவுடனான வரிவிதிப்பு குறித்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா கறாராகவே நடந்து கொண்டது. நட்பு நாட்டிடம் கறாராகவும், ஆரம்பம் முதலே எதிரெதிரே நிற்கும் சீனாவிடம் அடங்கி நடந்து கொள்ளும் அமெரிக்காவின் மனோபாவம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. 

 

Edit by Prasanth.K