ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்: தாயும் குழந்தைகளும் நலம் என தகவல்!

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்: தாயும் குழந்தைகளும் நலம் என தகவல்!
siva| Last Updated: வியாழன், 6 மே 2021 (20:20 IST)
ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்: தாயும் குழந்தைகளும் நலம் என தகவல்!
ஒரே பிரசவத்தில் மூன்று அல்லது நான்கு குழந்தைகள் பிறப்பதை அவ்வப்போது கேள்வி பட்டிருப்போம். ஆனால் ஒரே பிரசவத்தில் பெண் ஒருவர் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மேற்கு அமெரிக்க நாடான மாலி என்ற நாட்டில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்துள்ளன. 25 வயதான அவருக்கு ஐந்து பெண் குழந்தைகளும் 4 ஆண் குழந்தைகளும் பிறந்து உள்ளன என்பதும் தாய் மற்றும் குழந்தைகள் அனைவரும் நலமாக இருப்பதாகவும் மாலி நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்

அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 7 குழந்தைகள் பிறக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் 9 குழந்தைகள் பிறந்தது மருத்துவ உலகின் மிகப்பெரிய ஆச்சரியம் என்றும் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்து உள்ளதால் அனைவரும் இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு குழந்தையின் எடை 500 கிராம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

மருத்துவ உலகில் இதுவரை ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்து அனைத்து குழந்தைகளும் உயிரோடு இருப்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்பட்டு வருகிறது
இதில் மேலும் படிக்கவும் :