71 வயது பாட்டியை காதலித்து திருமணம் செய்த 17 வயது வாலிபர்


Murugan| Last Modified வெள்ளி, 22 ஜூலை 2016 (18:52 IST)
தன்னை விட 54 வயது முதிர்ந்த மூதாட்டியை 17 வயது வாலிபர் ஒரு காதலித்து திருமணம் செய்து கொண்ட விவகாரம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

 

 
அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் உள்ள செவியர்வில்லி பகுதியில் வாழும் 71 வயதான அல்மெடா ஏர்ரேலின் கணவர் 2013ஆம் ஆண்டு இறந்துவிட்டார்.  சமீபத்தில்தான் இவரது 45 வயது மகனும் மரணமடைந்தார். 
 
மகனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட அல்மெடா, அங்கு கேரி ஹார்ட்விக்(17) என்ற வாலிபரை சந்தித்தார். கணவனை இழந்த அவருக்கு கேரியின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனாலும் வயது காரணமாக அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.


 

 
கேரியை பொருத்தவரை, தன்னை விட வயதான பெண்மணிகளுடன் அதிக மோகம் கொண்டவர்.  8 வயதிலேயே பள்ளி ஆசிரியை காதல் கொண்டவர். கடைசியாக 77 வயது மூதாட்டியுடன் தொடர்பில் இருந்துள்ளார். அந்த உறவில் ஏற்பட்ட கசப்பின் காரணமாக சோகத்தில் இருந்த கேரிக்கு, அல்மெடா தேவதையாக தெரிந்துள்ளார்.


 

 
எப்படியோ அல்மெடாவிடம் பேசி சம்மதிக்க வைத்து விட்டார் கேரி. பிறகென்ன.. இரு தரப்பு உறவினர்களின் பலத்த எதிர்ப்புகளையும் மீறி கடந்த அக்டோபர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டு, இப்போது ஈருடல் ஓருயிர் என்று வாழ்கின்றனர். ஒருவரின் பெயரை ஒருவர் தங்கள் மார்பில் பச்சைக் குத்திக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் உறவு பலமாகிவிட்டது.
 
காதலுக்கு கண்கள் இல்லை என்று சொல்வார்கள். வயதும் இல்லை என்பதை இந்த ஜோடி நிரூபித்திருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :