வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2016 (15:06 IST)

துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி

அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

 
அமெரிக்கா நிகழும் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க அந்நாட்டு பலவாறு முயற்சித்து வருகின்றது. ஆனாலும், அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்களால் அடிக்கடி உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது.
 
இந்நிலையில் அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தின் உள்ள பிகி கௌண்டி பகுதியில் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
 
இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பழிவாங்கும் நடவடிக்கை எனவும், இதில் 3 குழந்தைகள் உயிர் பிழைத்ததாகவும் ஓகியோ மாகாண வழக்கறிஞர் மைக் டிவைன் தெரிவித்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.