11.62 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு!

world corona
11.62 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு!
siva| Last Updated: வெள்ளி, 5 மார்ச் 2021 (06:33 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 11.62
கோடியாக அதிகரித்துள்ளது

உலகம் முழுவதும் 116,203,023 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 2,580,636
பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 91,877,152
பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 21,745,235 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29,522,106 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 533,488 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 20,093,278 என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,173,572 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 157,584 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 10,838,021 என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,796,506 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 261,188 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 9,637,020 என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :