ஒரு குழந்தை திட்டத்தால் சீனாவின் பிறப்பு விகிதம் சரிவு!

webdunia photoFILE
இதுதொடர்பாக சீனாவின் தேசிய மக்கள் கணக்கெடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தின் இயக்குனர் லின்-பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே துவக்கப்பட்டதன் பலனை உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனா தற்போது பெற்றுள்ளது என்றார்.

சீனாவின் பல்வேறு நகரங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு குழந்தை திட்டத்தால், நாட்டின் பிறப்பு விகிதம் கட்டுக்குள் வந்துள்ளதாகவும், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணுக்கு 5.8 குழந்தை என்ற விகிதம் தற்போது 1.8 ஆக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Webdunia|
ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற சீன அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தால், அந்நாட்டின் பிறப்பு விகிதம் 5.8% இருந்து 1.8% ஆக சரிந்துள்ளது.
மேலும், குடும்பக் கட்டுப்பாடு காரணமாக சீன மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 68 வயதாக இருந்த சராசரி ஆயுட்காலம் தற்போது 73 ஆக உயர்ந்துள்ளதாக லின்-பின் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :