மனித உரிமைகள் பேரவையின் கேள்விகளுக்கு இலங்கை அமைச்சர் மவுனம்

ஜெனீவா | Webdunia|
மனித உரிமைகள் பேரவையின் கேள்விகளுக்கு இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க மவுனம் சாதித்ததாக செய்தி வெளியாகி உள்ளது.

ஜெனீவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் வைத்து, வெளிநாட்டு தரப்பினரால் எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு, இலங்கை தரப்பில் கலந்து கொண்ட பிரதிநிதி அமைச்சர் மகிந்த சமரசிங்க எந்த பதில்களையும் கூறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பல்வேறு மனித உரிமை நிலவரங்கள் குறித்து கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்த போதும், அது தொடர்பாக அவர் மவுனம் சாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம், இந்த மாநாட்டின் போது அவர் ஆற்றிய நீண்ட உரை, ராஜபக்ச அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மட்டுமே உள்ளடக்கி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :