இந்திய மீனவர்கள் 6 பேரை கைது செய்தது பாகிஸ்தான்

Webdunia| Last Modified ஞாயிறு, 1 மார்ச் 2009 (14:14 IST)
பாகிஸ்தானுக்கு உட்பட்ட கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகக் குற்றம்சாட்டி இந்திய மீனவர்கள் 6 பேரை பாகிஸ்தான் கடல் எல்லைப் பாதுகாப்புப் அமைப்பினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 27ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் அனைவரும் நேற்று கராச்சி நகரில் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்நாட்டு கடல் எல்லை பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வாரத்திற்குள் இந்திய மீனவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :