ஆஸ்கார் விருது பெற்ற நடிகையின் தாய், சகோதரர் கொலை!

Webdunia| Last Modified சனி, 25 அக்டோபர் 2008 (16:19 IST)
நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்கார் விருது பெற்ற பிரபல நடிகையான ஜெனிபர் ஹட்சனின் தாய் மற்றும் சகோதரர் சுட்டுக் கொல்லப்படடனர்.

இந்தக் கொலைகள் தொடர்பாக 7 வயது சிறுவனை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிகாகோ நகரைச் சேர்ந்தவர் ஜெனிபர் ஹட்சன். ஒரு தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான இவர், கடந்த ஆண்டு சிறந்த குணச்சித்திர நடிகைக்கான ஆஸ்கர் விருதனை வென்றார்.
சிக்காகோவிலுள்ள இவரது வீட்டில் வசித்து வந்த தாய் மற்றும் சகோதரர் நேற்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களது உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தது.

அவர்கள் வீட்டில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டதாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர். நடிகையின் தாய் மற்றும் சகோதரர் குடும்பத் தகராறு காரணமாக படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 7 வயது சிறுவனை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

இதனிடையே, படுகொலை பற்றி அறிந்ததும், நடிகை ஜெனிபர் ஹட்சன் தனது சொந்த ஊருக்கு விரைந்துள்ளார்..


இதில் மேலும் படிக்கவும் :