ஜெர்மன் பிரதமருடன் மன்மோகன் சிங் சந்திப்பு!

Webdunia| Last Modified சனி, 25 அக்டோபர் 2008 (16:04 IST)
ஆசிய ஐரோப்பிய உச்சி மாநாட்டில் பங்கேற்க பீஜிங் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலை இன்று சந்தித்து இந்தியா - ஜெர்மனி இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுகள் நடத்தினார்.

இரு தலைவர்களின் பேச்சுக்களின்போது, சர்வதேச அளவில் நிலவும் நிதி நெருக்கடியும் இடம்பெற்றதாகத் தெரிகிறது.

பல்கேரிய அதிபர் ஜார்ஜி பர்வனோவுடனும் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சுகள் நடத்தினார். என்றாலும் அதுபற்றிய விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இன்று நாடு திரும்பவுள்ள பிரதமர், அதற்கு முன்னதாக சீன அதிபர் ஹு ஜிண்டாவை சந்தித்துப் பேசவிருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :