தாய்லாந்து தம்பதி 58½ மணி நேரம் தொடர் முத்த‌த்‌தி‌‌ல் ‌கி‌ன்ன‌ஸ் சாதனை

Webdunia|
FILE
தாய்லாந்து நாட்டில் காதலர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட தம்பதியருக்கான நீண்டநேர தொடர் முத்தம் தரும் 'கிஸ்ஸத்தான்' போட்டியில் 58½ மணி நேரம் தொடர்ந்து முத்தம் கொடுத்து ஒரு தம்பதி சாதனை படைத்துள்ளனர்.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் காதலர் தினத்தை முன்னிட்டு நீண்டநேர தொடர் முத்தம் தந்து சாதனை படைக்கும் 'கிஸ்ஸத்தான்' போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் தொடர்ந்து 58½ மணி நேரம் நின்றபடியே முத்தங்களை பகிர்ந்துகொண்ட எக்கசாய் திரணார்த் (44) அவரது மனைவி லக்சனா (33) ஆகியோர் ஒரு புதிய கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளனர்.
சாதனையின் நிறைவு நேரம் வரை நின்றபடியே இருக்க வேண்டும். உணவு மற்றும் திரவ பானங்களை ஸ்டிரா மூலமாக தான் உட்கொள்ள வேண்டும். இயற்கை உபாதைகளை கழிக்கும் போதும் உதடுகளை பிரிக்கக்கூடாது என்ற நிபந்தனைகளின் கீழ் நடத்தப்பட்ட இந்த போட்டியில் தாய்லாந்து தம்பதியர் புரிந்திருக்கும் சாதனை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கின்னஸ் சாதனைகளை பதிவு செய்யும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியில் 58 மணி நேரம் 35 நிமிடங்கள் 58 வினாடிகளுக்கு, தொடர்ந்து முத்தங்களை பரிமாறிக்கொண்ட இந்த தம்பதியர், முந்தைய நீண்ட, நெடிய முத்த சாதனையை விட 8 மணி நேரம் அதிகமாகும்.

இந்த தொடர் முத்த சாதனையை படைத்த இவர்களுக்கு 2 வைர மோதிரங்களும், 3 ஆயிரத்து 300 அமெரிக்க டாலர்களும் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :