சிங்கப்பூர் ஆலையில் விபத்து: 3 இந்தியர்கள் பலி

Webdunia| Last Modified ஞாயிறு, 1 மார்ச் 2009 (13:08 IST)
சிங்கப்பூரில் இயங்கி வரும் வேதியியல் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

சிங்கப்பூரின் தென்மேற்குப் பகுதியில் இயங்கி வரும் கெமிக் இண்டஸ்ட்ரீஸ் என்ற வேதியியல் ஆலையில் கடந்த வெள்ளிக்கிழமை விபத்து ஏற்பட்டது. ஆலையில் பயன்படுத்தப்படும் நைட்ரிக் அமிலம் வெளியேறியதால் பணியில் ஈடுபட்டிருந்த ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

இதில் 2 இந்தியர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் ஒரு இந்தியர் நேற்றிரவு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், காயமடைந்தவர்களில் ஒருவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :