‌விடுதலை‌ப்பு‌லிக‌ள் க‌ண்‌ணிவெடி‌த் தா‌க்குத‌ல் : படையினர் 47 பே‌ர் ப‌லி!

Webdunia| Last Modified சனி, 25 அக்டோபர் 2008 (13:57 IST)
நாச்சிக்குடா முத‌ல் புத்துவெட்டுவான் வரையிலான பகு‌திக‌ளி‌ல் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளை விடுதலைப்புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 47 படையினர் கொல்லப்பட்டனர். 87 பேர் காயமடைந்துள்ளனர்.

சிறிலங்கா படையினர் ஏவுகணை‌, ‌பீர‌ங்‌கி தா‌க்குத‌ல்களை நட‌த்‌தியவாறு நாச்சிக்குடா, வன்னேரி, அக்கராயன், புத்துவெட்டுவான் பகுதிகளில் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டவாறே மு‌ன்னே‌றின‌ர்.

அ‌ப்போது, அ‌ந்த பாதைக‌‌ளி‌‌ல் விடுதலைப்புலிகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடிகள் வெடித்தன. இந்த தாக்குதலில் சிங்கள ராணுவத்தினர் 47 பேர் பலியானார்கள். 87 ராணுவத்தினர் காயம் அடைந்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :