1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. ஸ்ஸ்ஸப்பா முடியல!.. உடலில் துர்நாற்றம்!. 3 வருஷ மெம்பர்ஷிப்பை கேன்சல் செய்த ஜிம்!..

ஸ்ஸ்ஸப்பா முடியல!.. உடலில் துர்நாற்றம்!. 3 வருஷ மெம்பர்ஷிப்பை கேன்சல் செய்த ஜிம்!..

gym
உலகில் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஆசைப்படும் பலரும் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்கிறார்கள். ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும்போது எல்லோருக்கும் வியர்வை வரும். ஆனால், உடலில் அதிக துர்நாற்றம் வந்ததாக சொல்லி ஜிம்முக்கு வந்து கொண்டிருந்த ஒருவரின் மூன்று வருட மெம்பர்ஷிப்பை ஜிம் நிர்வாகமே ரத்து செய்த சம்பவம் சீனாவில் நடந்திருக்கிறது.

சீனாவின் ஹான்ஜோ பகுதியில் வசித்து வருபவர் சி(Shi). அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஜிம்மில் 2025ம்  வருடம் மே மாதம் 6388 யான் (இந்திய மதிப்பில் ரூ.89.300) செலுத்தி மூன்று வருடம் மெம்பர்ஷிப் எடுத்திருந்தார். ஏப்ரல் 2028-ல் அந்த மெம்பர்ஷிப் முடிகிறது. வாரத்திற்கு 5 அல்லது 6 முறை அங்கு சென்று சி உடற்பயிற்சி செய்து வந்தார். இதன்மூலம் 125 கிலோவிலிருந்து 80 கிலோ அவர் குறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான், ஜிம் நிர்வாகத்திடமிருந்து அவருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருக்கிறது. உங்கள் உடம்பில் இருந்து அதிக துர்நாற்றம் வருவதாக ஜிம்முக்கு வருபவர்கள் பலரும் தொடர்ந்து புகார் சொல்லி வருகிறார்கள்.. எனவே உங்கள் மெம்பர்ஷிப்பை கேன்சல் செய்கிறோம். எங்கள் ஜிம்மிற்கு வரும் ஒவ்வொருவரும் எங்களுக்கு முக்கியமானவர்கள்தான் என்றாலும் எல்லோருடைய எண்ணங்களுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டிய நிலையில் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்’ என சொல்லப்பட்டிருந்தது.

அதோடு அவர் மீண்டும் அங்கே வந்து விடக்கூடாது என்பதற்காக வேறொரு ஜிம்மில் அவருக்கு மூன்று மாத மெம்பர்ஷிப்புக்கான பணத்தையும் அந்த நிர்வாகம் செலுத்தியிருக்கிறது.. அதோடு அவர் உடற்பயிற்சி செய்த காலம் போக மீதி இருக்கும் பணத்தையும் திருப்பிக் கொடுப்பதாகவும் அந்த ஜிம் நிர்வாகம் கூறியிருக்கிறது.
About Writer
பாலகிருஷ்ணன்