மைக்கேல் ஜாக்சன் மரணத்தை கொலைக் குற்றமாக பதிவு செய்ய காவல்துறை முடிவு

லண்டன்| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:49 IST)
பாப் இசை உலகின் சக்கரவர்த்தி மைக்கேல் ஜாக்சனின் மரணத்திற்கு காரணமாக அமைந்த ஓவர்-டோஸ் ஊசி மருந்தை அவருக்கு வழங்கிய நபர் மீது கொலைக் குற்றம் பதிவு செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக மைக்கேல் ஜாக்சனுக்கு டிப்ரிவன் எனப்படும் ஓவர்-டோஸ் வலிநிவாரணி மருந்தை அளித்தவர்கள், இன்னும் 2 நாளில் கைது செய்யப்படலாம் என நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜாக்சனின் குடும்ப நண்பரான டெர்ரி ஹார்வி நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், டிப்ரிவன் என்ற வலிநிவாரணி ஊசி மருந்து மற்றும் சில மாத்திரைகளால்தான் ஜாக்சன் உயிரிழந்தார் என அவரின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து அந்த மருந்தை அவருக்கு வழங்கியவர்கள் மீது கிரிமினல் குற்றம்சுமத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :