முகமது சயீத் விடுதலையை எதிர்த்த மனுவை திரும்பப் பெற்றது பஞ்சாப் மாகாண அரசு

இஸ்லாமாபாத்| Webdunia| Last Modified செவ்வாய், 14 ஜூலை 2009 (12:44 IST)
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத்-உத்-தாவா தலைவர் ஹஃபீஸ் முகமது சயீத்தை வீட்டுக் காவலில் இருந்து விடுவித்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு இன்று திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2 மனுவில், வீட்டுக்காவலில் இருந்த முகமது சயீத்தை விடுதலை செய்தற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முகமது சயீத்தை வீட்டுக்காவலில் வைக்க உறுதியான் ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில், சயீத்தை வீட்டுக்காவலில் இருந்து விடுதலை செய்ததை எதிர்க்கும் மனுவை பஞ்சாப் மாகாண அரசு இன்று திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :