பிஜி தீவில் கடும் நில நடுக்கம்

வெலிங்டன்| Webdunia|
பிஜி தீவில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது.

பசிபிக் கடல் பிராந்தியத்தில் பிஜி தீவில் நேற்று நள்ளிரவு 12.52 மணிக்கு கடும் நில நடுக்கம் ஏற்பட்டது.

இதனால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின.தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி கடும் குளிரிலும் ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

ரிக்டர் அளவு கோலில் இதற்கிடையே 6.3 ஆக பதிவான இந்த நில நடுக்கம், பிஜி தலைநகரம் சுவா நகருக்கு தெற்கு 582 கி.மீட்டர் ஆழத்தில் உருவானதாக தெரிவிக்கப்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :