நெல்சன் மண்டேலா பிறந்தநாள்: வாழ்த்துகள் குவிந்தன!

Webdunia| Last Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (21:00 IST)
தென்ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலா தனது 90வது பிறந்த தினத்தை இன்று எளிமையாகக் கொண்டாடினார்.

அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள தனது சொந்த கிராமமான கியுனுவில், 3வது மனைவி கிராகா மாச்செலுடன் தனது பிறந்தநாளை மண்டோலா கொண்டாடினார்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை மண்டேலாவுக்கு தெரிவித்துள்ளனர்.

மண்டேலா பிறந்த தினத்தை முன்னிட்டு நாளை கியுனு கிராமத்தில் நடைபெற உள்ள விருந்தில், தென்ஆப்ரிக்க அதிபர் தபோ பெகி, ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ஜகோப் ஜுமா உள்ளிட்ட 500 பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :