தெற்கு பிலிப்பைன்ஸில் புத்தாண்டு கொண்டாத்தின் போது குண்டு வெடித்ததில் 5 பேர் பலி

Webdunia|
தெற்கு பிலிப்பைன்ஸில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாத்தின் போது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளனர் என்று போலீசர் தெரிவித்துள்ளனர்.

பாசிலான் மாகாணத்தில் சுமிசிப் டவுனில் பொதுமக்கள் வீட்டிற்கு வெளியே புத்தாண்டை கொண்டாடிய போது அங்கிருந்த குண்டு வெடித்துள்ளது.

குண்டுவெடிப்பு தொடர்பாக அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கு அல்கொய்தாவுடன் தொடர்புடையை அபு செயீப் என்ற கிளர்ச்சி படை செயல்பட்டுவருகிறது. இந்த இயக்கம் குண்டுவெடிப்பை நிகழ்த்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :