திபெத்துக்கு விடுதலை கோரவில்லை: தலாய்லாமா

வாஷிங்டன்:| Webdunia| Last Modified செவ்வாய், 1 செப்டம்பர் 2009 (20:36 IST)
திபெத்துக்கு விடுதலை கோரவில்லை என்று புத்த மத தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார்.

திபெத்தின் புத்தமத தலைவரான தலாய் லாமா, தைவான் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், 'திபெத் குறித்து மிக தெளிவான, வெளிப்படையான நிலைப்பாட்டை நாங்கள் கொண்டிருக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.

திபெத்துக்கு சுதந்திரம் வேண்டும் என்றோ, திபெத் தனி நாடாக வேண்டும் என்றோ விரும்பவில்லை என்றும் கூறிய அவர் மது ஆதங்கம் என்ன என்பது சீன அரசுக்கு நன்றாகவே தெரியும் என்றார்.
எனினும், பிரிவினைவாதி என்ற குற்றச்சாற்றை தனது மீது சுமத்துவதாக கூறிய தலாய் லாமா, தனது சுற்றுப்பயணத்தை பயணத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்றும், இதனால் தைவான் அதிபரை சந்திக்கப்போவதில்லை என்றும் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :