திசநாயகத்திற்கு தண்டனை: அமெரிக்கா அதிருப்தி!

Webdunia| Last Modified செவ்வாய், 1 செப்டம்பர் 2009 (19:25 IST)
இலங்கையின் பிரபல ஊடகவியலாளரான ஜே.எஸ். திசநாயகாவிற்கு சிறிலங்க உயர் நீதிமன்றம் 20 ஆண்டுக் கால கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவுத் துறையின் பேச்சாளர் இராபர்ட் வுட், திசநாயகத்துக்கு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது கண்டு அதிருப்தியடைகிறோம். சிறைச்சாலையில் திசநாயகத்தின் உடல் நிலையையும், பாதுகாப்பையும் உறுதிப்டுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சிறிலங்க அரசை கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.
சிறிலங்க அரசினால் தொடர்ந்து அச்சுறுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டுள்ள அந்நாட்டு ஊடகவியலாளர்களின் சுதந்திரம் குறித்து தொடர்ந்து அக்கறையுடையவர்களாக இருப்போம் என்றும், திசநாயகத்தின் மேல் முறையீட்டை தொடர்ந்து கண்காணிப்போம் என்றும் இராபர்ட் வுட் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :