செவ்வாய் கிரகத்திற்கு சுற்றுலா செல்லும் அமெரிக்கர்

Webdunia|
FILE
௦501 நாட்கள் சுற்றுப்பயணமாக செவ்வாய் கிரகத்திற்கு செல்ல அமெரிக்கர் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு சுற்றுலா செல்லும் முதல் மனிதர் என்று பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு, அமெரிக்க செல்வந்தர், முதன் முறையாக, பயணம் செய்ய உள்ளார், அமெரிக்காவின் செல்வந்தர்களில் ஒருவரான, டென்னிஸ் டிடோ, இவருக்கு வயது 72. விண்வெளி அறிவியலாளர் ஆன இவர், நாசா விஞ்ஞானியாக பணியாற்றியவர்.

பூமியில் இருந்து, 360 கி.மீ., உயரத்தில், பூமியை சுற்றி வரும், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு, கடந்த, 2001ல், இவர் சுற்றுலா சென்றார்.இதற்கிடையே, வரும், 2018ல், செவ்வாய் கிரகத்துக்கு, இவர், 501 நாட்கள், பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன் மூலம், செவ்வாய் கிரகத்துக்கு செல்லும், முதல் சுற்றுலா பயணி என்ற பெருமை, இவருக்கு கிடைக்கும்.
இரண்டு பேர், பயணம் செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள, “ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்’ விண்கலம், “பால்கன் ஹெவி’ ராக்கெட் மூலம், வரும், 2018ல், ஜனவரியில், பூமியில் இருந்து, செவ்வாய் கிரகத்துக்கு செலுத்தப்பட உள்ளது. 72 வயதாகும் டிடோ, தொடர்ந்து, ஓராண்டுக்கு மேல் விண்வெளியில் செலவிடு உள்ளது உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பிரச்னைகளை அவருக்கு ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :