உலகில் 90 % மொழிகள் காணாமல் போகும்: ஐ.நா.

நியூயார்க்| Webdunia| Last Modified திங்கள், 18 ஜனவரி 2010 (17:20 IST)
அடுத்த 100 ஆண்டுகளில் உலகம் முழுவதும் உள்ள பேச்சு மொழிகளில் 90 விழுக்காடு காணாமல் போய்விடும் என்று ஐ.நா. ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

உலகம் முழுவதும் சுமார் 6,000 முதல் 7,000 மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பூர்வீக குடிமக்களால் பேசப்படுகிறது.

ஆனால் இவற்றில் பெரும்பான்மையான - 90 விழுக்காடு - மொழிகள் காணாமல் போகும் நிலையில் உள்ளன. ஏனெனில் மேற்கூறிய மொழிகளில் 4 விழுக்காடு மொழிகளே உலகம் முழுவதும் அதிகமாக - உலக மொத்த மக்கள் தொகையில் 97 % - பேசப்படுகிறது.
மீதமுள்ள 96 விழுக்காடு மொழிகளும், உலகம் முழுவதும் 3 % மக்களால் மட்டுமே பேசப்படுகிறது.

இதன் காரணமாக அடுத்த 100 ஆண்டுகளில் 90 விழுக்காடு மொழிகள் காணாமல் போய் விடும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மொழிகள் காணாமல் போவது பூர்வீக குடிமக்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :