புதன், 18 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 பிப்ரவரி 2026 (21:42 IST)

அமெரிக்காவுக்கு அதிக வரி செலுத்தும் நாடுகள் எது?... எவ்வளவு வரி!..

donald
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல உலக நாடுகளுக்கு அதிக அளவு வரி விதிப்பேன் என தொடர்ந்து மிரட்டி வருகிறார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு 500 சதவீத வரி விதிப்பேன் என மிரட்டினார்.. கடந்த பல வருடங்களாகவே அமெரிக்காவுக்கு இந்தியா 25 சதவீத வரியை செலுத்தி வருகிறது.

இந்நிலையில்தான்,  நேற்று பிரதமர் மோடிக்கும், டொனால்ட் டிரம்புக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 25 சதவீத வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதோடு ரஷ்யாவிடம் இனிமேல் கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என இந்தியா தெரிவித்திருப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார். ஆனால், எங்களிடம் இதுவரை இந்தியா அப்படி சொல்லவில்லை என ரஷ்யா கூறியிருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவிற்கு அதிக வரை செலுத்தும் நாடுகள் பற்றி தெரிந்து கொள்வோம். லாவோஸ் மற்றும் மியான்மர் ஆகிய இரண்டு நாடுகளும் அமெரிக்காவிற்கு 40 சதவீத வரியை செலுத்துகின்றன. அதற்கடுத்த இடத்தில் இருக்கும் சீனா 37 சதவீத வரியை செலுத்துகிறது.
பங்காளதேஷ், இலங்கை, தைவான், வியட்நாம் ஆகிய நான்கு நாடுகளும் 20 சதவீத வரியை செலுத்துகிறது.

அதேபோல் பாகிஸ்தான், இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நான்கு நாடுகளும் அமெரிக்காவுக்கு 19 சதவீத வரிகளை செலுத்துகின்றன. இந்தியா 18 சதவீத வரியை செலுத்துகிறது. தென்கொரியாவும், ஜப்பானும் அமெரிக்காவுக்கு 15 சதவீத வரியை செலுத்துகின்றன.