செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 1 ஏப்ரல் 2014 (18:16 IST)

இனி குழந்தைகளை கண்டித்தால் சிறை தண்டனை

இங்கிலாந்தில் குழந்தைகள் மீது பெற்றோர்களின் அரவணைப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் அன்பு, பாசம், கிடைக்காமல் மனநலம் பாதித்த நிலையில் அந்நாட்டு குழந்தைகள் வளர்கிறார்கள்.
 
இதனால் பெற்றோர் வழிகாட்டுதல் இன்றி எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்கு உள்ளாகும் சூழ்நிலை உருவாகிறது. அதை தடுக்க வேண்டும் என்று ராணி எலிசபெத் வலியுறுத்தியுள்ளார். அங்கு ‘சிண்ட்ரெல்லா சட்டம்’ என்ற புதிய சட்டம் ஜூன் மாதம் அறிமுகப்படுத்த உள்ளனர். அதன்படி குழந்தைகள் மீது அன்பு இன்றி கொடூரமாக நடந்து கொள்ளும் பெற்றோர்களுக்கு 10 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். இது ‘பாலியல் வன்முறை’ புகாருக்கு நிகரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சிறந்த சந்ததியை உருவாக்குவதில் பெற்றோர்களின் அன்பு முதன்மையானது.அது கிடைக்காமல் போகும் குழந்தைகள் விரக்தியடைவதும்  மனநிலை பாதிக்கப்படுவதும், உலகெங்கும் நடந்து வருகிறது.  பெற்றோர்களின் அன்புதான் குழந்தைகளின் பண்புக்கு அடிப்படையாக உள்ளது. எனவே இந்த சட்டம்  இங்கிலாந்தின் எதிர்காலத்திற்கு நன்மையாக அமையும் என்று பலரும் இதை வரவேற்றுள்ளனர்.