செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 28 மார்ச் 2022 (10:16 IST)

முதன்முறையாக காதுகேளாத நடிகருக்கு ஆஸ்கர் விருது!

2021 ஆம் ஆண்டு வெளியான ‘CODA’ திரைப்படத்தில் நடித்ததற்காக அமெரிக்க நடிகர் ட்ராய் கோட்சூர் தனது முதல் ஆஸ்கார் விருதை வென்றுள்ளார். 

 
உலகம் முழுவதும் சினிமா துறையினரால் மிகவும் எதிர்பார்க்கப்படும், அதிகம் பேசப்படும் விருதாக அகாடமி விருதுகள் எனப்படும் ஆஸ்கர் விருதுகள் உள்ளன. இந்த ஆண்டிற்கான 94 வது ஆஸ்கர் விருது விழா நடந்த நிலையில் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
 
ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் உக்ரைன் மக்களுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வாசகங்கள் திரையிடப்பட்டன. முன்னதாக இந்த விழாவில் உன்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி காணொளி காட்சி வாயிலாக தோன்றிப் பேசுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்குப் பதிலாக, வாசகங்கள் திரையிடப்பட்டன. 
 
2021 ஆம் ஆண்டு வெளியான ‘CODA’ திரைப்படத்தில் நடித்ததற்காக அமெரிக்க நடிகர் ட்ராய் கோட்சூர் தனது முதல் ஆஸ்கார் விருதை வென்றுள்ளார். நடிப்பிற்காக அகாடமி விருதை வென்ற முதல் காதுகேளாதவர் என்ற வரலாற்றை நடிகர் ஆஸ்கார் விழாவில் படைத்தார்.