தேக்கடி - வன சு‌ற்றுலா!

FILE

படகுப் பயண‌‌ச் சீட்டில் குறிப்பிட்டுள்ள படகு மற்றும் படகுக்கான இருக்கை எண்‌ணில்தான் அமர வேண்டும். படகில் பயணிகளின் பாதுகாப்பிற்கான காற்றடைத்த மேல் உடை தரப்படுகிறது. இதை அவசியம் அணிய வேண்டும். படகில் இருக்கையை விட்டு எழுந்து பிற பகுதிகளுக்குச் செல்லக் கூடாது. என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் பாதுகாப்பிற்காக கடைப்பிடிக்கப்படுகின்றன.

யானை ஏற்றம்!
FILE

இங்கு யானைகள் மீது அமர்ந்தபடி ஏரிப்பகுதியையும் இயற்கை அழகையும் ரசித்து வருவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. யானையின் முதுகில் வசதியாக அமர்ந்து கொள்வதற்கான சதுர வடிவிலான பாதுகாப்புடைய இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த யானை பயணத்திற்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
Webdunia| Last Updated: திங்கள், 16 ஏப்ரல் 2018 (14:21 IST)


இதில் மேலும் படிக்கவும் :