1. இதர வாசிப்பு
  2. »
  3. அறுசுவை
  4. »
  5. சைவம்
Written By Webdunia

பேரிச்சம்பழத்தில் சூப்பர் சூப்

FILE
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். பேரீச்சம் பழம். இந்த பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன.

இரும்புசத்து அதிகம் உள்ள பேரிச்சம் பழம் நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது. வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த இந்த பழம் நரம்பு தளர்ச்சியை போக்கும். புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிரம்பியுள்ள பேரிட்சம் பழங்கள் புற்றுநோய் வராமல் தடுக்கும்.


பேரிச்சம் பழ சூப் செய்ய தேவையான பொருள்கள்:

பேரிச்சம் பழம் - 5
வெள்ளரிக்காய் - 1
கேரட் - 2
தேங்காய் - 2 கீற்று
புதினா இலை - 5
மிளகு - 2
பச்சை மிளகாய் -1
மல்லி இலை - சிறிது

செய்முறை:

FILE
பேரிச்சம் பழம், வெள்ளரிக்காய், கேரட், தேங்காய் ஆகியவற்றை நன்றாக நறுக்கி கொள்ளவும். பின்னர் அதனுடன் மிளகு, பச்சை மிளகாய், புதினா இலை ஆகியவை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

இந்த கலவை அரைந்ததும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, வடிகட்டவும். பின்னர் விழுதுடன் மேலும் தண்ணீர் விட்டு இரண்டாவது சாறு எடுத்துகொள்ளலாம்.

பிழிந்த சாறை கொதிக்க விடவும்.கடைசியில் அரைத்து வடித்து எடுத்த விழுதை அதில் சேர்த்து கலக்கலாம். பின்னர் மல்லி இலை, உடன் இரண்டு முழு பேரிச்சை தூவி இறக்கவும்.