வெள்ளி, 29 மார்ச் 2024
  1. இதர வாசிப்பு
  2. »
  3. அறுசுவை
  4. »
  5. சைவம்
Written By Webdunia

கீரை கோப்தா கறி

FILE
மதிய சாப்பாட்டிற்கு கீரை என்றாலே வீட்டில் இருக்கும் சிறுவர்களுக்கும் சில பெரியவர்களுக்கும் உணவு சாப்பிடவே பிடிக்காது. அதற்காக அதிக அளவில் சத்துக்கள் நிறைந்த கீரை வகைகளை நாம் ஒதுக்கிவிடவும் முடியாது. அதனால் அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் கீரையை விதவிதமாக செய்து பரிமாறினால், கீரையா? என அலறியவர்கள் எல்லாம் மகிழ்ச்சியுடன் சாப்பிடுவார்கள்.

தேவையானவை

ஆய்ந்து, நன்கு அலசி,பொடியாக நறுக்கிய ஏதோ ஒரு கீரை கட்டு
பனீர் (துருவியது) - 10 கிராம்
உருளைகிழங்கு - 1
பெரிய வெங்காயம் - 1
முந்திரி பேஸ்ட் - சிறிதளவு
வெங்காய விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தயிர் - அரை கப்
உப்பு மற்றும் எண்ணெய் - தேவைகேற்ப

FILE
செய்முறை

கீரையை வேகவைத்து, துருவிய பனீர், வேகவைத்து மசித்த உருளைகிழங்கு, சீரகம், மஞ்சள், மிளகாய்த்தூள், நறுக்கிய வெங்காயம் உப்பு ஆகியவற்றைகீரையுடன் கலந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு அதில் கீரை உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்துக் கொள்ளவும்.

இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் முந்திரி பேஸ்ட், வெங்காய விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி, தயிர் சேர்த்துக் கலக்கவும்.

அதில் பொறித்த கோப்தா உருண்டைகளை சேர்த்து, வதக்கி எடுத்து பரிமாறவும்.

நன்றி - பசுமை இந்தியா