1. இதர வாசிப்பு
  2. »
  3. அறுசுவை
  4. »
  5. சைவம்
Written By Webdunia

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் - பொட்டுக்கடலை முறுக்கு

FILE
கிருஷ்ண ஜெயந்தி தினமான இன்று, பல விதமான பலகாரங்களை நமது வீட்டில் செய்து வழிப்படுவது வழக்கம். அவ்வகையில் கிருஷ்ண ஜெயந்திக்கு பிரத்யேகமான இந்த சுவையான பொட்டுக்கடலை முறுக்கை செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையானவை

அரிசி மாவு - 1 கப்
பொட்டுக்கடலை மாவு - 1 கப்
மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்
கறுப்பு எள் - 1 ஸ்பூன்
ஓமம் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைகேற்ப

செய்முறை

பொட்டுக் கடலை மாவையும், அரிசி மாவையும் நன்றாக சலித்து, ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.

மாவுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள், எள், ஓமம், சீரகம் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும்.

இந்த மாவுடன் சிறிது, சிறிதாகத் தண்ணீர் விட்டு சற்று கெட்டியான மாவாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

இதனுடன் தேங்காய் எண்ணெய் சிறிது சேர்த்துப் பிசைந்து, முறுக்கு நாழியில் மூன்று மூன்று துளைகள் கொண்ட அச்சினை வைத்துப் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.