ஹெல்தி வெஜிடபில் கொழுக்கட்டை

Webdunia|
FILE
உருளைக் கிழங்கில் அதிக அளவில் ஆன்டிபாக்டீரியல் மூலக்கூறு உள்ளது. இந்த மூலக்கூறுகள் வயிற்றில் அல்சருக்கு காரணமான பாக்டீரியாவை அழித்து நெஞ்செரிச்சலை குறைய காரணமாகிறது. இதனால் பக்க விளைவுகள் ஏற்படாது.

தேவையான பொருட்கள்:

1.மைதா - 2 கப்
2.வெண்ணெய் - 1/4 கப்
3.உருளைக்கிழங்கு- 2
4.கேரட் - 1
5.பீன்ஸ் - 10
6.முட்டைக்கோஸ் - சிறியது
7.காலிஃபிளவர் - சிறியது
8.பட்டாணி - 1/2 கப்9.பொடித்த பச்சை மிளகாய் - 2
10.வெள்ளைப் பூண்டு - 2 பல்
11.பொடியாக நறுக்கிய இஞ்சி -சிறிதளவு
12.பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
13.வெங்காயத்தாள் - சிறிதளவு
14.சில்லி சாஸ் - சிறிதளவு
15.சோயா பீன்ஸ் சாஸ் - சிறிதளவு
16.உப்பு - தேவையான அளவு17.எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

மைதா மாவு, வெண்ணெய் கலந்து அதனுடன் சிறிதளவு சூடான தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு உருளைக் கிழங்கு, கேரட், முட்டைக் கோஸ், காலிஃபிளவர், பட்டாணி ஆகியவற்றை தண்ணீர் விடாமல் ஆவியில் வேகவைத்துக் கொள்ளவேண்டும். தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், வெங்காயத்தாள், வெள்ளைப் பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து தாளித்து, பிறகு காய்கறிக் கலவையை சேர்த்து, அதனுடன் சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்து கிளறவேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :