வேப்பம் பூ பச்சடி

Webdunia|
தேவையான பொருட்கள்:

வேப்பம்பூ 2 டீஸ்பூன்
புளி சிறு எலுமிச்சங்காய் அளவு
உப்பு 1 1/2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 6
கடுகு 1 டீஸ்பூன்
பெருங்காயம் கொஞ்சம்
கறிவேப்பிலை கொஞ்சம்
வெல்லம் சிறு எலுமிச்சங்காய் அளவு
எண்ணெய் 6 டீஸ்பூன்
அரிசி மாவு 2 டீஸ்பூன்
செய்முறை:

வேப்பம்பூவை, இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெயை விட்டு, கருகாமல் நல்ல கரும் சிவப்பாக வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.

வாணலியில் 4 டீஸ்பூன்அளவு எண்ணெய் விட்டு, கடுகு, கிள்ளிய மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை, இவற்றைத் தாளிக்கவும்.
புளியைக் கரைத்து, ஒரு டம்ளருக்கு கூடுதலாக விட்டு, உப்பு போட்டு, நன்றாகக் கொதிக்கும்போது வெல்லத்தைப் போடவும்.

வெல்லம் கரைந்தவுடன் அரிசி மாவைக் கரைத்து விட்டு, சேர்ந்து கொதித்தபின் இறக்கவும். வேப்பம்பூ பொடியைப் போட்டு கலந்து பரிமாறவும்.


இதில் மேலும் படிக்கவும் :